நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் இன்று, முள்ளிவாய்க்காலில், சுடரேற்றி அஞ்சலி செலுத்தி, உறுதிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் தேசியப் பட்டியல் மூலம் தேர்வு செய்யப்பட்ட செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் இன்று முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியில் வணக்கம் செலுத்தி, சுடர் ஏற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
அத்துடன், நாடாளுமன்றம் செல்வதற்கு முன்னர் உறுதிப்பிரமாணமும் எடுத்துக் கொண்டுள்ளனர்.
இந்த நிகழ்வுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், வெளி மாவட்டங்களில் இருந்து பஸ்கள் மற்றும் வாகனங்கள் மூலம் அழைத்து வரப்பட்டிருந்தனர்.