Home » சட்டம் & அரசியல் » சர்வதேசத்திடம் அரசு பணியாது! தினேஷ் திட்டவட்டம்

சர்வதேசத்திடம் அரசு பணியாது! தினேஷ் திட்டவட்டம்

தமிழ் மக்களுக்கு இராணுவமே முழுப் பாதுகாப்பு. எம்மை நம்பிய தமிழ் மக்கள் மீது நாம் அதிக கவனம் செலுத்துவோம்.

👤 Sivasankaran15 Aug 2020 2:06 PM GMT
சர்வதேசத்திடம் அரசு பணியாது! தினேஷ் திட்டவட்டம்
Share Post

பெரும்பான்மைப் பலத்துடன் - வரலாற்று வெற்றியுடன் புதிய அரசு ஆட்சிப்பீடம் ஏறியுள்ளது. இந்த அரசு அனைத்து சர்வதேச நாடுகளுக்கும் நேசக்கரம் நீட்டுகின்றது. ஆனால், எந்தவொரு நாடுகளிடமும் எந்தச் சந்தர்ப்பத்திலும் அடிபணிந்து செயற்படத் தயாரில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான புதிய அரசின் புதிய அமைச்சரவையில் வெளிவிவகார அமைச்சராக மீண்டும் பதவியேற்றுள்ள தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மக்களுக்கு இராணுவமே முழுப் பாதுகாப்பு. எம்மை நம்பிய தமிழ் மக்கள் மீது நாம் அதிக கவனம் செலுத்துவோம்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு நாட்டு மக்கள் வழங்கிய ஆணையின் பிரகாரம் இலங்கையின் சுயாதீனத்துக்கு அச்சுறுத்தலாக இருந்த ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு நல்லாட்சி அரசு வழங்கிய இணை அனுசரணை வாபஸ் பெறப்பட்டுள்ளது. அதனால் ஐ.நா. தீர்மானங்களும் செல்லுபடியற்றதாகி விட்டன.

இந்தப் புதிய அரசில் இலங்கைக்கு எதிரான ஐ.நாவின் எந்தத் தீர்மானங்களும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என குறிப்பிட்டுள்ளார்.