Home » சட்டம் & அரசியல் » முன்னாள் போராளிகளின் விபரங்களைத் திரட்டும் இராணுவம்!

முன்னாள் போராளிகளின் விபரங்களைத் திரட்டும் இராணுவம்!

முன்னாள் போராளிகள் இருந்தால், உடனடியாகப் பதிவுகளைச் செய்ய அறிவுறுத்தியுள்ளனர்.

👤 Sivasankaran16 Aug 2020 1:58 PM GMT
முன்னாள் போராளிகளின் விபரங்களைத் திரட்டும் இராணுவம்!
Share Post

யாழ்ப்பாணம் - கீரிமலைப் பகுதியில் இன்று அதிகாலை வீடுகளுக்குச் சென்ற இராணுவத்தினர் வீட்டில் இருந்த அனைவரது விபரங்களையும் சேகரித்து அவற்றைப் பதிவு செய்துள்ளனர்.

அத்துடன் வீடுகளில் முன்னாள் போராளிகள் யாராவது இருக்கின்றனரா என்ற விபரங்களை அளிக்குமாறும் கூறி வருகின்றனர்.

முன்னாள் போராளிகள் இருந்தால், உடனடியாகப் பதிவுகளைச் செய்ய அறிவுறுத்தியுள்ளனர்.

என்ன காரணத்திற்காக முன்னாள் போராளிகளின் விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன என அப்பகுதி மக்கள் வீட்டிற்கு வந்த இராணுவத்தினரிடம் கேட்டபோது, அதுபற்றி எதுவும் கூற முடியாது எமக்கு மேலிடத்திலிருந்து உத்தரவு வந்துள்ளது என்று கூறியதாக மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மக்களின் விபரங்களை புதிப்பிப்பதற்காக இவ்வாறு இராணுவத்தினர் தகவல்களை திரட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.