ராஜகிரிய பகுதியில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு முன் பிணை வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றில் நீதிபதி கிஹான் குலதுங்க முன்னிலையில், சம்பிக்க ரணவக்க இன்று முன்னிலையான போது இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2016ஆம் ஆண்டு இடம்பெற்ற விபத்து தொடர்பில் சட்டமா அதிபரால் அதிகுற்றச்சாட்டு பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு நாளை விசாரணைக்கு வரவிருந்தது.
இந்த நிலையில், நாளைய தினம் நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, இன்றைய தினம் நீதிமன்றில் சம்பிக்க முன்னிலையாகியுள்ளார்.
இதன்போது, அவருக்கு முன்பிணை வழங்கப்பட்டதுடன், எதிர்வரும் 28ஆம் திகதி மன்றில் முன்னிலையாகுமாறும், அவரது சாரதியான திலும் துஷித குமாரவை நாளைய தினம் நீதிமன்றில் முன்னிலையாகுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.