Home » சட்டம் & அரசியல் » தமிழர் தேசம் அங்கீகரிக்கப்படவேண்டும்! நாடாளுமன்றில் கஜேந்திரகுமார்

தமிழர் தேசம் அங்கீகரிக்கப்படவேண்டும்! நாடாளுமன்றில் கஜேந்திரகுமார்

அரசியலமைப்பு திருத்தங்களின்போது சுயநிர்ணய உரிமை என்பன அங்கீகரிக்கப்படவேண்டும்.

👤 Sivasankaran21 Aug 2020 3:19 PM GMT
தமிழர் தேசம் அங்கீகரிக்கப்படவேண்டும்! நாடாளுமன்றில் கஜேந்திரகுமார்
Share Post

தமிழர் தேசம் அங்கீகரிக்கப்படவேண்டும் என்று இலங்கையின் நாடாளுமன்றத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இந்தக்கோரிக்கையை இன்று விடுத்தார்.

பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் கொள்கை விளக்க உரை மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றியபோதே அவர் இந்தக்கோரிக்கையை விடுத்தார்.

தமிழர்களின் சமவுரிமை சமஅந்தஸ்து மற்றும் அரசியலமைப்பு திருத்தங்களின்போது சுயநிர்ணய உரிமை என்பன அங்கீகரிக்கப்படவேண்டும்.

இது கடந்த தேர்தலில் வடக்குகிழக்கில் ஏகமனதாக வெளிக்காட்டப்பட்டுள்ளது. எனவே தமிழர்கள் வழங்கிய ஆணையை மீறமுடியாது என்றும் அவர் தெரிவித்தார். போர்க்குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் அவசியம் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

எந்த ஒரு நாடும் இறையாண்மை என்ற கொள்கையின் பின்னால் ஒளிந்துக்கொள்ளவும் பொறுப்புக்கூறலை தவிர்க்கவும் முடியாது என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.