விக்னேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றோருக்கு பாராளுமன்றத்திற்குள் இனவாதம் பேசுவதற்கு இடமளிக்க மாட்டோம் என்று மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
விக்னேஸ்வரனும் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் பாராளுமன்றத்தில் சத்தியப்பிரமானம் செய்ய முன்னர் முள்ளிவாய்க்காலிலேயே உத்தியோகபூர்வமற்ற சத்தியப்பிரமாணத்தை செய்தனர். பயங்கரவாதிகள் இறுதியாக அழிக்கப்பட்ட இடமே அது, பயங்கரவாதிகள் நாட்டை பிளவுப்படுத்தும் எண்ணத்திலேயே செயற்பட்டனர்.
அப்படியாயின் இவர்கள் இருவரும் அங்கு சத்தியப்பிரமாணம் செய்துகொள்கின்றார்கள் என்றால் நாட்டை பிளப்படுத்தும் நிகழ்ச்சி நிரலிலேயே அவர்கள் இருக்கின்றனர். இவ்வாறாக பிளவுப்படுத்தும் எண்ணத்தில் இருந்துகொண்டு எவ்வாறு அவர்கள் பாராளுமன்றத்தில் ஒற்றையாட்சியை பாதுகாப்போம் என்று சத்தியப்பிரமாணம் செய்தார்கள் என்று நாங்கள் கேள்வியெழுப்புவோம். எவ்வாறாயினும் பாராளுமன்றத்திற்குள் இனவாதம் பேசுவதற்கு அவர்களுக்கு இடமளிக்க மாட்டோம். என அவர் குறிப்பிட்டுள்ளார்.