Home » சட்டம் & அரசியல் » வடக்கிற்கு இராணுவ ஆளுநரை நியமிக்கும் முடிவை மறு பரிசீலனை செய்யுமாறு கோரிக்கை!

வடக்கிற்கு இராணுவ ஆளுநரை நியமிக்கும் முடிவை மறு பரிசீலனை செய்யுமாறு கோரிக்கை!

அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தினால் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

👤 Sivasankaran24 Aug 2020 4:00 PM GMT
வடக்கிற்கு இராணுவ ஆளுநரை நியமிக்கும் முடிவை மறு பரிசீலனை செய்யுமாறு கோரிக்கை!
Share Post

வடக்கு மாகாண ஆளுநராக, முன்னாள் இராணுவ அதிகாரியை நியமிக்கும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோரிடம், அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கிளிநொச்சியில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில், அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தினால் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்துக்கு புதிய ஆளுநர் நியமிக்கப்படவுள்ளதாகவும், அவர் முன்னர், வவுனியா இராணுவ தலைமையக கட்டளை அதிகாரியாக செயற்பட்டு வந்தவர் எனவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

வடக்கு மாகாண ஆளுநராக முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவரை நியமிக்கும் முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று, நேற்று நடந்த அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் கூட்டத்தில் பரிந்துரைக்கத் தீர்மானம் எடுத்துள்ளோம்.

குறித்த தீர்மானத்தை மறு பரிசீலனை செய்யுமாறு ஜனாதிபதி மற்றம் பிரதமர் ஆகியோரிடம் வேண்டுகோள் விடுக்கிறோம். என்றும், அரசாங்க பொது ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.