Home » சட்டம் & அரசியல் » விக்கியின் உரையை நீக்கினால் சர்வதேசத்திடம் முறையிடுவோம்!

விக்கியின் உரையை நீக்கினால் சர்வதேசத்திடம் முறையிடுவோம்!

விக்னேஸ்வரன் ஆற்றிய உரை, சிங்கள - பௌத்த பேரினவாதிகளைக் கொதித்தெழ வைத்துள்ளது.

👤 Sivasankaran26 Aug 2020 1:45 PM GMT
விக்கியின் உரையை நீக்கினால் சர்வதேசத்திடம் முறையிடுவோம்!
Share Post

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரனின் உரையை, நாடாளுமன்ற பதிவேட்டிலிருந்து நீக்கினால், சர்வதேச சமூகத்திடம் முறையிடுவோம் என்று வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம், தெரிவித்தார்.

"நாடாளுமன்ற முதல்நாள் அமர்வில், விக்னேஸ்வரன் ஆற்றிய உரை, சிங்கள - பௌத்த பேரினவாதிகளைக் கொதித்தெழ வைத்துள்ளது.

தமிழ் மொழியும் ஒரு மொழி என்று அங்கீகரிக்கப்பட்டப் பின்னர், தமிழ் மொழியில் உரையாற்றியதையடுத்து, கூக்குரலிடுவதும் நாடாளுமன்றப் பதிவேட்டில் இருந்து, உரையயை நீக்குவதை பரிசீலிப்பதாக சபாநாயகர் கூறுவதும், ஜனநாயக முறைக்கு விரோதமான ஒரு செயற்பாடாகவே கருதுகிறோம்.

அவ்வாறு இதை நீக்கினால், நாங்கள் சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியத்திடமும் சர்வதேச சமூகத்திடமும் முறையிடுவோம்" என்றார்.