Home » சட்டம் & அரசியல் » தூதரக அதிகாரிகள் அழுத்தங்களை கொடுக்க முடியாது!

தூதரக அதிகாரிகள் அழுத்தங்களை கொடுக்க முடியாது!

வெளியில் உள்ள தரப்பினருக்கு வழங்கவில்லை எனவும் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.

👤 Sivasankaran27 Aug 2020 1:49 PM GMT
தூதரக அதிகாரிகள் அழுத்தங்களை கொடுக்க முடியாது!
Share Post

நாட்டின் அரசியல் நடவடிக்கைகள் தொடர்பாக அரச தலைவர்களே தீர்மானிக்க வேண்டும், தூதரக அதிகாரிகள் அது தொடர்பாக அழுத்தங்களை கொடுக்க முடியாது என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் ராஜாங்க அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

13வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள மாகாண சபை முறையை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என இந்திய தூதுவர் கோபால் பாக்லே கூறியிருந்தமை தொடர்பாக நேற்று கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இலங்கை இறையாண்மையுள்ள நாடு. மூன்றில் இரண்டு பெரும்பான்மையை மக்கள் நாட்டின் அரச தலைவர்களுக்கே வழங்கியுள்ளனர். வெளியில் உள்ள தரப்பினருக்கு வழங்கவில்லை எனவும் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.