Home » சட்டம் & அரசியல் » விக்கியின் உரையால் சூடாகிய நாடாளுமன்றம்!

விக்கியின் உரையால் சூடாகிய நாடாளுமன்றம்!

விக்னேஸ்வரன், தமிழர்களே இலங்கையின் பூர்வீக குடிகள் என்று குறிப்பிட்டிருந்தார்.

👤 Sivasankaran28 Aug 2020 1:38 PM GMT
விக்கியின் உரையால் சூடாகிய நாடாளுமன்றம்!
Share Post

நாடாளுமன்றத்தில் கடந்தவாரம் விக்னேஸ்வரன் ஆற்றிய உரை தொடர்பில் இன்று சபையில் கடும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன.

கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் உரையாற்றியிருந்த விக்னேஸ்வரன், தமிழர்களே இலங்கையின் பூர்வீக குடிகள் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பின மனுச நாணயக்கார விக்னேஸ்வரனின் உரையை நாடாளுமன்ற குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் இன்று நாடாளுமன்றம் கூடிய போது, மனுச நாணயக்கார தாம் பிரச்சினை எழுப்பிய போதும் ஹன்சார்ட்டில் விக்னேஸ்வரனின் உரை பதிவு செய்யப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டினார்.

விக்னேஸ்வரனின் கருத்துக்களுக்கு பதிலளிக்க வேண்டும் என்றும், பிளவுபட்ட இலங்கையை விக்னேஸ்வரன் ஊக்குவிக்கின்றார் எனவும், மனுச நாணயக்கார தெரிவித்தார்.

இதனை நிராகரித்த சபாநாயகர், உறுப்பினர்களுக்கு தமது கருத்தை வெளிப்படுத்தும் உரிமை உள்ளது என்று தெரிவித்தார். எனினும் சபாநாயகரின் நிலைப்பாட்டை ஏற்க மறுத்த மனுச நாணயக்கார விக்னேஸ்வரனின் நிலைப்பாட்டிற்கு தனது எதிர்ப்பை வெளியிட்டார்.

இதன்போது உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் கருத்து சுதந்திரத்தினை நாடாளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களும் மதிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். சபாநாயகரின் நிலைப்பாட்டை யும் அவர் வரவேற்றார்.