கனடாவில் காணாமல் போன பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள பொலிசார் அது தொடர்பில் பொதுமக்கள் உதவியை நாடியுள்ளனர். கனடாவின் வடக்கு ஓகநாகன் ( North Okanagan) பகுதியைச் சேர்ந்த கரினா ஹியூனிஸ் (Carina Heunis) என்ற 35 வயது பெண் தான் காணாமல் போயுள்ளார்.
பொலிசார் கூறுகையில், கரினாவை கண்டுபிடிக்க பல முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம். ஆனாலும் இன்னும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அவரின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு குறித்து கவலை கொண்டுள்ளோம்.
5 அடி 8 அங்குலம் உயரம் கொண்ட கரினா ஹியூனிஸ் 144 பவுண்டுகள் எடை கொண்டவராவார். அவர் இருக்கும் இடம் பற்றி தகவல் கிடைத்தால் உடனடியாக உள்ளூர் பொலிசாரை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.