கிழக்கு மத்தியதரைக் கடலில் கிரேக்கம் மற்றும் சைப்ரஸுடனான அதிகரித்துவரும் பதற்றங்களைக் குறைப்பதில் முன்னேற்றம் காணப்படாவிட்டால், துருக்கிக்கு புதிய பொருளாதாரத் தடைகள் மற்றும் கடுமையான பொருளாதார நடவடிக்கைகளை விதிக்கும் என ஐரோப்பிய ஒன்றியம் அச்சுறுத்தியுள்ளது.
சைப்ரஸ் தீவுக்கு அருகே கடல் எல்லைகள் மற்றும் எரிவாயு துளையிடும் உரிமைகள் தொடர்பான மோதல் அதிகரித்து வருகின்ற நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்ட இராஜதந்திரி ஜோசப் பொரெல் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.