Home » சட்டம் & அரசியல் » கொரோனா தடுப்பூசியை உருவாக்க ஊழல் நிறைந்த உலக சுகாதார அமைப்புடன் சேரமாட்டோம்' - அமெரிக்கா அதிரடி அறிவிப்பு!

கொரோனா தடுப்பூசியை உருவாக்க ஊழல் நிறைந்த உலக சுகாதார அமைப்புடன் சேரமாட்டோம்' - அமெரிக்கா அதிரடி அறிவிப்பு!

6 தயாரிப்பாளர்களிடம் இருந்து 80 கோடி தடுப்பூசிகளை பெறுவதற்கும் அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளது.

👤 Sivasankaran3 Sep 2020 12:24 PM GMT
கொரோனா தடுப்பூசியை உருவாக்க ஊழல் நிறைந்த உலக சுகாதார அமைப்புடன் சேரமாட்டோம் - அமெரிக்கா அதிரடி அறிவிப்பு!
Share Post

உலக சுகாதார நிறுவனத்துடன் ஏறத்தாழ 170 நாடுகள் இணைந்து செயல்பட்டு வருகின்றன. தடுப்பூசி உருவாக்கத்தை விரைவு படுத்தவும், உற்பத்தி செய்யவும், வினியோகிக்கவும் அவை உடன்பட்டுள்ளன.

ஆனால் கொரோனா வைரஸ் தடுப்பூசியை உருவாக்குவதற்கும், உற்பத்தி செய்வதற்கும், சம அளவில் வினியோகிப்பதற்கும் நடந்து வருகிற உலக சுகாதார நிறுவனத்தின் முயற்சியில் சேரப்போவதில்லை என்று அமெரிக்கா கூறி உள்ளது. சீனாவின் ராஜதந்திரத்தில் உலக சுகாதார நிறுவனத்துக்கு பங்கு இருப்பதே இதற்கு காரணம் என தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வாஷிங்டன் வெள்ளை மாளிகை கூறுகையில், "இந்த வைரசை தோற்கடிப்பதை உறுதி செய்வதற்கு அமெரிக்கா தொடர்ந்து தனது பன்னாட்டுக் கூட்டாளிகளை ஈடுபடுத்தும். ஆனால் ஊழல் நிறைந்த உலக சுகாதார அமைப்புடன் சேரமாட்டோம்" என குறிப்பிட்டு உள்ளது. மேலும், 6 தயாரிப்பாளர்களிடம் இருந்து 80 கோடி தடுப்பூசிகளை பெறுவதற்கும் அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளது.