Home » சட்டம் & அரசியல் » பட்டதாரிகளுக்கு இராணுவப் பயிற்சி! - பௌத்த பிக்கு எதிர்ப்பு

பட்டதாரிகளுக்கு இராணுவப் பயிற்சி! - பௌத்த பிக்கு எதிர்ப்பு

நிர்வாகச் செயற்பாடுகள் தொடர்பாக பயிற்சிகளை வழங்குமாறு தென்னே ஞானாநந்த தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

👤 Sivasankaran6 Sep 2020 11:50 AM GMT
பட்டதாரிகளுக்கு இராணுவப் பயிற்சி! - பௌத்த பிக்கு எதிர்ப்பு
Share Post

அரச சேவைக்கு உள்வாங்கப்பட்டுள்ள பட்டதாரிகளுக்கு வழங்கப்படும் இராணுவப் பயிற்சிக்கு மாறாக முறையாக அரச நிர்வாகச் செயற்பாடுகள் தொடர்பாக பயிற்சிகளை வழங்குமாறு தென்னே ஞானாநந்த தேரர், கோரிக்கை விடுத்துள்ளார்.

அரச சேவைக்கு உள்வாங்கப்பட்டுள்ள பட்டதாரிகளுக்கு வழங்கப்படும் இராணுவப் பயிற்சிக்கு மாறாக முறையாக அரச நிர்வாகச் செயற்பாடுகள் தொடர்பாக பயிற்சிகளை வழங்குமாறு தென்னே ஞானாநந்த தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இவ்வாறு இணைத்துக் கொள்ளப்பட்ட பட்டதாரிகளுக்கு 5 படிமுறைகளில் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதோடு, அவற்றில் முதல் பயிற்சி முழுமையான இராணுவ பயிற்சியாகும். பட்டதாரிகளை இராணுவ முகாம்களுக்குள் முடக்கிவைப்பதால் அரசாங்கம் எவ்வாறான பலன்களை எதிர்பார்க்கிறது? பட்டதாரிகளுக்கு இந்த பயிற்சி தொடர்பில் மீள் பரிசீலனை அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.