Home » சட்டம் & அரசியல் » இண்டர்போல் உதவியுடன் விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடவடிக்கை.!

இண்டர்போல் உதவியுடன் விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடவடிக்கை.!

இன்றும் புலிகளின் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

👤 Sivasankaran8 Sep 2020 7:36 AM GMT
இண்டர்போல் உதவியுடன் விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடவடிக்கை.!
Share Post

சர்வதேச மட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை முடக்க இலங்கை அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

"இண்டர்போலுடன் இணைந்து புலிகளின் சர்வதேச நிதிச் செயற்பாடுகளை முடக்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம்" எனவும் அவர் கூறினார்.

"புலிகளின் தேவைக்காகவே மாகாண சபை முறைமை இலங்கையில் கொண்டு வரப்பட்டது. இன்றும் புலிகளின் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

நாம் புலியின் வாலையே அழித்துள்ளோம். தலை இன்னமும் சர்வதேச மட்டத்தில் உயிர்ப்புடன் இயங்குகின்றது. எனவே, நாம் இன்னொரு போருக்கு எப்போதும் தயாராக இருக்க வேண்டும். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி இருந்தால் மட்டுமே இதனை எம்மால் கையாள முடியும்.

இந்தியாவை எமக்கெதிராகத் தூண்டிவிட நினைக்கும் தமிழர் தரப்பினர் அரசை நெருக்கடிக்குள் தள்ளுவதாக நினைத்து கொண்டு தமிழ் மக்களையே நெருக்கடிக்குள் தள்ளுகின்றனர்" - என்றார்.