Home » சட்டம் & அரசியல் » அமெரிக்காவின் திட்டங்களால் சிறிலங்காவுக்கு ஆபத்து வராது!

அமெரிக்காவின் திட்டங்களால் சிறிலங்காவுக்கு ஆபத்து வராது!

நாங்கள் மிகுந்த வெளிப்படை தன்மையுடன் செயற்படுகின்றோம்

👤 Sivasankaran8 Sep 2020 7:39 AM GMT
அமெரிக்காவின் திட்டங்களால் சிறிலங்காவுக்கு ஆபத்து வராது!
Share Post

அமெரிக்காவின் செயற்பாடுகள் சிறிலங்காவின் இறைமைக்கு ஒருபோதும் பாதிப்பை ஏற்படுத்தாது என்று சிறிலங்காக்கான அமெரிக்க தூதுவர் அலைனா ரெப்ளிட்ஸ் தெரிவித்துள்ளார்.

"அமெரிக்காவின் உதவி திட்டங்கள் எவையும் சிறிலங்காவின் இறைமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கத்தை கொண்டவையல்ல. மேலும், பரஸ்பரம் இறைமையை மதித்து பாதுகாப்பதே வலுவான ஒத்துழைப்பு. துரதிஸ்டவசமாக எங்களின் பல திட்டங்கள் மற்றும் ஈடுபாடுகள் குறித்து சமீப காலங்களில் பிழையான கருத்து காணப்படுகின்றது.

ஆனால், எங்களின் எந்தத் திட்டங்களும் சிறிலங்காவின் இறைமைக்கு பாதிப்பை ஏற்படுத்துபவையல்ல. சிறிலங்காவுக்கான திட்டங்களை உருவாக்குவது நடைமுறைப்படுத்துவதில் நாங்கள் மிகுந்த வெளிப்படை தன்மையுடன் செயற்படுகின்றோம்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.