முன்னாள் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கொஹேன சீனாவுக்கான புதிய தூதுவராக நியமிக்கப்படவுள்ளார்.
சீனாவுக்கான புதிய தூதுவராக முன்னாள் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கொஹேன நியமிக்கப்படவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.
வெளிவிவகார அமைச்சு அவரது நியமனம் தொடர்பான விபரங்களை உயர் பதவிகள் குறித்த குழுவின் அங்கீகாரத்துக்காக அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர் முன்னர் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் செயலாளராகவும் ஐக்கிய நாடுகள் சபைக்கான சிறிலங்காவின் நிரந்தரப் பிரதிநிதியாகவும் பணியாற்றியுள்ளார்.