Home » சட்டம் & அரசியல் » இந்திய - சீன எல்லை பதற்றம்: கிழக்கு லடாக் எல்லையில் கத்தி, கம்புகளுடன் சீன ராணுவம்

இந்திய - சீன எல்லை பதற்றம்: கிழக்கு லடாக் எல்லையில் கத்தி, கம்புகளுடன் சீன ராணுவம்

கிழக்கு லடாக்கின் முகாபரி என்ற இந்திய கண்காணிப்புச் சாவடியில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன.

👤 Sivasankaran9 Sep 2020 6:52 AM GMT
இந்திய - சீன எல்லை பதற்றம்: கிழக்கு லடாக் எல்லையில் கத்தி, கம்புகளுடன் சீன ராணுவம்
Share Post

கிழக்கு லடாக் பகுதியில் உள்ள பாங்கோங் ட்ஸோவின் தெற்கு கரைப்பகுதியில் உள்ள மெய்யான கட்டுப்பாட்டு கோடு (எல்ஏசி) அருகே சீன படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதாக இந்தியா குற்றம்சாட்டிய நிலையில், அந்த பகுதியில் கூர்மையான கத்திகள் இணைக்கப்பட்ட கம்புகளுடன் துப்பாக்கி ஏந்திய சீன படையினர் நிற்கும் படங்கள் வெளிவந்துள்ளன.

இந்த படங்கள் கிழக்கு லடாக்கின் முகாபரி என்ற இந்திய கண்காணிப்புச் சாவடியில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன.

இந்திய கண்காணிப்புச் சாவடியை நோக்கி சீன படையினர் வர முயன்றபோது அவர்கள் எச்சரிக்கப்பட்டதாக இந்திய தரப்பு கூறுகிறது.

மேலும், சீன படையினரை நோக்கி துப்பாக்கியால் சுடப்போவதாக இந்திய படையினர் எச்சரித்ததாகவும், அதன் பிறகு அவர்கள் முன்னேறாமல் நின்று கொண்டதால் துப்பாக்கி பிரயோகம் செய்யவில்லை என்றும் இந்திய தரப்பு கூறுகிறது.