Home » சட்டம் & அரசியல் » இந்தியாவிடம் போய் முறையிடுங்கள்! - வாசுதேவ கிண்டல்

இந்தியாவிடம் போய் முறையிடுங்கள்! - வாசுதேவ கிண்டல்

இதனை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

👤 Sivasankaran10 Sep 2020 9:12 AM GMT
இந்தியாவிடம் போய் முறையிடுங்கள்! - வாசுதேவ கிண்டல்
Share Post

இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்க வேண்டும் என இந்தியாவிடம் கேட்பதை போல, இந்திய மீனவர்களின் அத்து மீறல் விவகாரம் தொடர்பாகவும் இந்திய அரசிடம் சென்று முறையிடுங்கள் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய சார்ல்ஸ் நிர்மலநாதன் வடக்கின் மீனவர் பிரச்சினை குறித்து பேசினார். வடக்கு கடல் எல்லையில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகள் அதிகரித்துள்ளது என்றும் இதனை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

அதன்படி சார்ல்ஸ் நிர்மலநாதன் சபையில் முறையிட்ட வேளையில் இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக விடயத்திற்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜயசேகர வாக்குறுதியளித்தார்.

எனினும் சபையில் இருந்த அமைச்சர் வாசுதேவ நாணயக்கார வடக்குக்கு அதிகாரங்களை வழங்க வேண்டும் என இந்தியாவிடம் கேட்பதை போலவே இதனையும் அவர்களிடமே சென்று தீர்வு காணுங்கள் என கடும் தொனியில் கூறினார்.

இதற்கு பதில் தெரிவித்த சார்ல்ஸ் நிர்மலநாதன் "நீங்கள் எமது மக்களுக்கு தரவேண்டியதை தராது போனால் நாம் அவர்களிடம் தானே கேட்டாக வேண்டும்" என பதில் வழங்கினார்.