
சிறிலங்காவின் அமைச்சரவை நேற்று 'அதிகாரப்பூர்வமற்ற முறையில்' வாராந்திர அமைச்சரவைக் கூட்டத்தின்போது 20 ஆவது திருத்தம் குறித்து விவாதித்துள்ளது.
அத்துடன் அதை விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடிவுசெய்துள்ளதாக ஆங்கில செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.
சில வாரங்களுக்கு முன்னர் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட 20 வது திருத்தத்தின் உட்பிரிவுகளில் மாற்றம் செய்யப்படாமல் அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து விவாதிக்க நேற்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒரு புதிய அரசியலமைப்பு தொடர்பான திருத்தம் விவாதிக்கப்பட்டவுடன், சர்ச்சைக்குரியது என்று நிரூபிக்கப்பட்ட 20 வது திருத்தத்திற்குள் சில உட்பிரிவுகளும் அதில் எடுத்துக் கொள்ளப்படும், பின்னர் மாற்றங்களும் இணைக்கப்படும் என்று அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
இரட்டை குடியுரிமைக்கொண்ட ஒருவர் நாடாளுமன்ற ஆசனத்திற்கு போட்டியிட முடியும் மற்றும் பொது சேவை ஆணையம், சுயாதீன ஆணைக்குழுக்கள், ஜனாதிபதியின் செயலகம், பிரதமர் அலுவலகம், அமைச்சரவை அலுவலகங்கள் போன்றவற்றை கணக்காய்வில் இருந்து நீக்குதல் போன்ற உட்பிரிவுகளே பிரச்சினைக்குரிய விடயங்களாக மாறியுள்ளன.
இந்தநிலையில் இதனை உடனடியாகவே திருத்தினால் அது பின்னடைவாக கருதப்படலாம் என்பதன் காரணமாகவே திருத்தம் இல்லாமல் குறித்த வரைவைநாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் முடிவெடுத்துள்ளாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.