Home » சட்டம் & அரசியல் » ஜப்பானிடம் உதவியை நாடப் போவதில்லை: தைவான்

ஜப்பானிடம் உதவியை நாடப் போவதில்லை: தைவான்

இதுகுறித்து கலந்து ஆலோசிக்க தைவான் அதிபர் ட்சாய் தயாராக இல்லை.

👤 Sivasankaran21 Sep 2020 7:45 AM GMT
ஜப்பானிடம் உதவியை நாடப் போவதில்லை: தைவான்
Share Post

தைவான் அதிபர் ட்சாய் இங் வென் ஜப்பான் பிரதமர் யோஷிஇடே சுகா வை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடும் திட்டம் இப்போதைக்கு இல்லை என கடந்த ஞாயிறன்று பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

சீனா-தாய்வான் கடல் எல்லையில் பதற்றம் ஏற்பட்டது. இரு நாடுகளும் தங்கள் ராணுவம் மற்றும் கப்பல் படையை உஷார் படுத்தினர். தற்போது ஜப்பான் பிரதமர் சுகாவிடம் இதுகுறித்து கலந்து ஆலோசிக்க தைவான் அதிபர் ட்சாய் தயாராக இல்லை.

சீனாவின் அத்துமீறலை ஒடுக்க தைவான் ஜப்பான் உதவியை நாட வாய்ப்புள்ளது எனக் கூறப்பட்ட நிலையில், தைவான் அதிபர் இவ்வாறு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஜப்பான் சீனாவுடன் மற்ற தெற்காசிய நாடுகள் போலவே நட்பு பாராட்டவே விரும்புவது இதற்கு ஒர் முக்கிய காரணம். இந்த விவகாரத்தில் தனக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்பட்டுவரும் நேரத்தில் ஜப்பானிடம் உதவி கேட்கத் தேவையில்லை என தைவான் அரசு நினைக்கிறது என அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.