
ஜனத்தொகையை கட்டுப்படுத்த சீன அரசு அங்குள்ள சிறுபான்மையினரை கட்டாய கருத்தடை செய்ய வலியுறுத்தியதாக எழுந்த புகார் வதந்தி எனவும் இதனை யாரும் நம்பவேண்டாம் எனவும் சீன அரசு தெரிவித்திருந்தது.
சீன நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ளது ஜிங்க்ஜியாங் மாகாணம். சீனாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான இதில் ஜனத்தொகை மற்றும் ஜன நெருக்கடி அதிகம். தற்போது சிஎன்என் இதழுக்கு சீனா அனுப்பிய தரவுகளின்படி 2017ம் ஆண்டை ஒப்பிடுகையில் 2018 ஆம் ஆண்டு ஜின்ஜியாங் மாகாண ஜனத்தொகை மூன்றில் ஒரு பகுதியாக குறைந்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாகாணத்தில் யாருக்கும் கட்டாய கருத்தடை செய்ய சீன கம்யூனிச அரசு வலியுறுத்தவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜிங்க்ஜியாங் மாகாணத்தில் வாழும் உய்குர் இன இஸ்லாமிய மக்கள் அதிகமாக குழந்தை பெற்று மாகாணத்தின் ஜனத்தொகையை அதிகரிப்பதால் இவர்களுக்கு கட்டாயக் கருத்தடை செய்யப்படுகிறது என குற்றம்சாட்டப்பட்டது. பழங்குடி மக்களான இவர்களின் ஜனத்தொகை கிட்டத்தட்ட ஒரு கோடி என சீன அரசு கணக்கிட்டுள்ளது. இவர்களில் 20 லட்சம் பெண்கள் சீன முகாம்களில் அடைக்கப்பட்டு கட்டாய கருத்தடைக்கு உட்படுத்தப்பட்டனர் என அமெரிக்க மாநில அறிக்கை தெரிவித்தது. இது உலகம் முழுக்க மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் விவாதத்துக்கு உள்ளாகியது. இதற்கு தற்போது சீனா தனது சிஎன்என் அறிக்கை மூலம் பதில் அளித்துள்ளது.
உலகின் அதிக ஜனத்தொகை கொண்ட நாடாக விளங்கும் சீனாவில், ஜனத்தொகையை கட்டுப்படுத்த உய்குர் இன பெண்கள் கட்டாய கருத்தடை செய்து கொள்ள வற்புறுத்தப்படுகின்றனர் என கூறப்பட்டது. அட்ரியன் சென்ஸ் என்ற சீன அரசால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர், இந்த தகவலை முதன்முறையாக 2016ம் ஆண்டு வெளியிட்டார். ஒரு லட்சம் உய்கார் மக்களில் 50 பெண்களுக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு கருத்து தடை செய்யப்பட்டதாகவும் 2018 ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 250 ஆனதாகவும் கூறினார். ஆனால் தற்போது இவரது குற்றச்சாட்டுக்கு சீனா ஆதாரபூர்வமாக பதில் அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த 2010 முதல் 2018 வரை உய்குர் மக்களின் ஜனத்தொகை ஜின்ஜியாங் மாகாணத்தில் 30 லட்சமாக அதிகரித்துள்ளது எனக் கூறி, அதற்கான மக்கள் கணக்கெடுப்பு ஆவணங்களை சமர்ப்பித்துள்ளது.