Home » சட்டம் & அரசியல் » திட்டமிட்டபடி இன்று உண்ணாவிரதம் நடக்கும்- தமிழ்க் கட்சிகள் அறிவிப்பு!

திட்டமிட்டபடி இன்று உண்ணாவிரதம் நடக்கும்- தமிழ்க் கட்சிகள் அறிவிப்பு!

அதனை உரிய மரியாதையுடன் கவனத்தில் கொள்கிறோம்.

👤 Sivasankaran26 Sep 2020 10:21 AM GMT
திட்டமிட்டபடி இன்று உண்ணாவிரதம் நடக்கும்- தமிழ்க் கட்சிகள் அறிவிப்பு!
Share Post

பருத்தித்துறை நீதிமன்றம் நேற்று பிறப்பித்த தடைஉத்தரவை அடுத்து, தமிழ் தேசியக் கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் நேற்று மாலை ஒன்று கூடி ஆராய்ந்தனர். இந்தக் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களிடம் பேசிய சட்டத்தரணி என்.சிறிகாந்தா,

"தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் தியாகி திலீபனின் நினைவுகூரலுக்கான உரிமை ஆகியவற்றை வலியுறுத்தி தொண்டமனாறு செல்வச்சந்நிதி ஆலய வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துவதற்கு தீர்மானித்திருந்தோம்.

வல்வெட்டித்துறை காவல்துறையினர் பருத்தித்துறை நீதிமன்றத்தில் விண்ணப்பம் ஒன்றைச் சமர்ப்பித்து தடைக்கட்டளை ஒன்றைப் பெற்றிருக்கின்றனர். கொரோனா ஆபத்தைச் சுட்டிக்காட்டி பொலிஸார் வழங்கிய விண்ணப்பத்தினை ஏற்று நீதிமன்றம் இந்தக் கட்டளையை வழங்கியிருக்கிறது.

இந்தத் தடைக் கட்டளையில் பிரதிவாதிகளாக எவருடைய பெயரும் குறிப்பிடப்படாத போதும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கே தடைக்கட்டளை வழங்கப்பட்டிருக்கின்றது. எனவே அதனை உரிய மரியாதையுடன் கவனத்தில் கொள்கிறோம்.

இதையடுத்து, திட்டமிட்டபடி போராட்டத்தை எங்கு நடத்துவதென்பது தொடர்பாக ஒரு திட்டவட்டமான தீர்மானத்தை நாம் எடுத்துள்ளோம்.

நீதிமன்றக் கட்டளையை மீறாத வகையில் அதற்கான மரியாதைகளுடன் திட்டமிட்டபடி போராட்டம் நடத்தப்படும். சுகாதார நடைமுறைகள் மிக இறுக்கமாகப் பின்பற்றப்பட்டு போராட்டம் நடத்தப்படும்.

அத்துடன், ஏற்கனவே அறிவித்திருந்தது போல 28ஆம் திகதி வடக்கு கிழக்குத் தழுவிய முழு அடைப்பு போராட்டத்துக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பை வேண்டி நிற்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.