Home » சட்டம் & அரசியல் » இந்தியா-சீனா எல்லை விவகாரத்தில் உதவ விரும்புவதாக டிரம்ப் அறிவிப்பு!

இந்தியா-சீனா எல்லை விவகாரத்தில் உதவ விரும்புவதாக டிரம்ப் அறிவிப்பு!

நாங்கள் இதில் உதவ முடிந்தால் உதவ விரும்புகிறோம்.

👤 Sivasankaran26 Sep 2020 10:22 AM GMT
இந்தியா-சீனா எல்லை விவகாரத்தில் உதவ விரும்புவதாக டிரம்ப் அறிவிப்பு!
Share Post

வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நேற்று முன்தினம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, இந்தியா-சீனா எல்லை விவகாரத்தில் கருத்து தெரிவித்தார்.

"இந்தியாவும், சீனாவும் சிரமங்களை கொண்டிருக்கிறார்கள், அதுவும் கடினமான சிரமங்களை கொண்டிருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியும். ஆனாலும், அவர்களால் இந்த எல்லைப் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள முடியும் என்று நான் நம்புகிறேன். நாங்கள் இதில் உதவ முடிந்தால் உதவ விரும்புகிறோம்." என்று அவர் கூறினார்.

இதற்கிடையே எல்லைப் பிரச்சினை குறித்து அமெரிக்காவின் 'வால்ஸ்டிரீட்' பத்திரிகையும் கருத்து தெரிவித்து இருக்கிறது.

அந்தப் பத்திரிகை, "எல்லை மோதல் இந்தியாவை சமச்சீரற்ற பதிலை காண தூண்டுகிறது. அதன் கடற்படை வலிமையை நெகிழச்செய்கிறது. அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகளுடன் கூட்டுக் கடற்படை பயிற்சியைத் தீவிரப்படுத்துகிறது. புதிய கப்பல்களைக் கட்டுகிறது. இந்தியப் பெருங்கடலின் கடல் போக்குவரத்தை இந்தியா கண்காணிக்க அனுமதிக்கும் வகையில் கடலோர கண்காணிப்பு நிலையங்களின் வலையமைப்பை உருவாக்குகிறது" என கூறி உள்ளது.