Home » சட்டம் & அரசியல் » நாளை வடக்கு, கிழக்கு தழுவிய முழு அடைப்பு போராட்டம்!

நாளை வடக்கு, கிழக்கு தழுவிய முழு அடைப்பு போராட்டம்!

லெப். கேணல் திலீபனை நினைவு கூருவதற்கு நீதிமன்றம் தடைவிதித்திருந்தது.

👤 Sivasankaran27 Sep 2020 9:40 AM GMT
நாளை வடக்கு, கிழக்கு தழுவிய முழு அடைப்பு போராட்டம்!
Share Post

தமிழ்த் தேசிய கட்சிகளின் வேண்டுகோளுக்கு அமைவாக நாளை வடக்கு,கிழக்கில் முழு அடைப்பு போராட்டத்திற்கு பூரண ஆதரவு வழங்குமாறு மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்த லெப். கேணல் திலீபனை நினைவு கூருவதற்கு நீதிமன்றம் தடைவிதித்திருந்தது.

தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள அடக்குமுறைகளை அரசு நிறுத்தவேண்டும் என்று கோரி வடக்கு,கிழக்கு தாயகம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நாளை முன்னெடுக்கப்படவுள்ளது.