Home » சட்டம் & அரசியல் » டிரம்ப், ஜோ பிடன் இன்று நேருக்கு நேர் விவாதம்

டிரம்ப், ஜோ பிடன் இன்று நேருக்கு நேர் விவாதம்

குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார்.

👤 Sivasankaran29 Sep 2020 8:24 AM GMT
டிரம்ப், ஜோ பிடன் இன்று நேருக்கு நேர் விவாதம்
Share Post

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும், டொனால்டு டிரம்ப் மற்றும் ஜோ பிடன் இடையேயான நேருக்கு நேர் விவாதம் இன்று நடக்க உள்ளது.

அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல், நவம்பர் 3ம் தேதியன்று நடக்க உள்ளது. இதில், குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார்.

ஜனநாயகக் கட்சி சார்பில், முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடுகிறார். அமெரிக்க அதிபர் மற்றும் துணை அதிபர் தேர்தலின்போது, தங்கள் கொள்கைகள், சாதனைகள், திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து, இரண்டு கட்சியின் வேட்பாளர்களும் நேருக்கு நேர் விவாதம் நடத்துவர்.

முதல் முறையாக, 1960, செப்., 26ல், ஜான் எப் கென்னடி மற்றும் ரிச்சர்ட் நிக்சான் இடையே இது போன்ற விவாதம் நடந்தது.