
வடக்கு கரோலினாவில் ஷா பல்கலையில் கமலா ஹாரிஸ் பேசினார்
அமெரிக்க மக்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ஆற்றல் நீதிமன்றத்திற்கு உள்ளது. ஆரோக்கிய பராமரிப்பு சட்டம் ஓட்டுரிமை பறிப்பு உள்ளிட்ட பல வழக்குகளை இதற்கு உதாரணமாக கூறலாம்.
இந்நிலையில் தான் டிரம்ப் அவசரமாக உச்சநீதிமன்ற நீதிபதியை நியமனம் செய்துள்ளார். அதிபர் தேர்தலுக்குப் பின் அமையும் அரசு செய்ய வேண்டிய பணியை அதற்குள்ளாக செய்து விட டிரம்ப் துடிக்கிறார். அவரிடம் அதிகாரம் இருக்கிறது. ஆனால் தேர்தலுக்கு முன் நீதிபதியை நியமிக்க செனட் குழு அனுமதிக்காது. அதனால் நீதிபதி நியமனம் தொடர்பாக மக்கள் அவநம்பிக்கைக்கு ஆளாக வேண்டாம்.
வாக்களிப்பதைத் தவிர்க்க வேண்டாம். தங்கள் வாக்களிப்பு என்ன சாதித்து விடும் என நினைக்க வேண்டாம். அது குடியரசு கட்சிக்குச் சாதகமாக அமைந்து விடும். அக்கட்சி அதைத்தான் எதிர்பார்க்கிறது.
"அதற்கு இடம் கொடுக்க மாட்டோம் என மக்கள் சபதம் ஏற்க வேண்டும். டிரம்ப் தன் மோசமான செயல்பாடுகளால் ஆட்சியையும் பாராளுமன்ற மாண்பையும் பாழாக்கி விட்டார்.
அரசியலை ஸ்தம்பிக்கச் செய்து மக்களிடையே மோதலை துாண்டிவிட்டார். அவரது மோசமான செயல்பாடு உச்சநீதிமன்றம் வரை நீண்டுள்ளது. இனி அதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். டிரம்ப் ஆட்சியை அகற்றுவோம் என சபதம் ஏற்போம்" என்று அவர் கூறினார்.