Home » சட்டம் & அரசியல் » டிரம்ப் - பிடன் இடையே காரசார விவாதம்

டிரம்ப் - பிடன் இடையே காரசார விவாதம்

டிரம்ப் என்ன செய்கிறார் என்று அவருக்கே தெரியாது. சொல்லப்போனால் அவருக்கு எதுவுமே தெரியாது

👤 Sivasankaran30 Sep 2020 8:32 AM GMT
டிரம்ப் - பிடன் இடையே காரசார விவாதம்
Share Post

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் மற்றும் ஜோ பிடன் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. இருவரும் மாறி மாறி விமர்சனங்களை முன்வைத்தனர்.

விவாதத்தில் பிடன் பேசுகையில் "இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மிக மிக மெதுவான பொருளாதார மீட்புதான் இப்போது உள்ளது. தடுப்பு மருந்து விவகாரத்தில் நாங்கள் உங்களை நம்புவதாக இல்லை. விஞ்ஞானிகளை தான் நம்புகிறோம். டிரம்ப் என்ன செய்கிறார் என்று அவருக்கே தெரியாது. சொல்லப்போனால் அவருக்கு எதுவுமே தெரியாது" என விமர்சித்து இருந்தார்.

இதற்கு பதிலளித்த டிரம்ப் "கொரோனா விவகாரத்தில் ஜோ பிடன் சொல்வது எல்லாம் கேட்டு இருந்தால் இன்னும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்திருப்பார்கள். H1N1 வைரஸ் விவகாரத்தை ஜோ பிடன் கையாண்ட விதம் என்பது மிகப்பெரிய பேரழிவு. ஜோ பிடன் இந்த நாட்டின் பொருளாதாரத்தை முடக்கி வைக்க வேண்டும் என்று நினைக்கிறார்" என குற்றம் சாட்டினார்.