Home » சட்டம் & அரசியல் » இந்தியாவுக்கு மாலத்தீவு நன்றி

இந்தியாவுக்கு மாலத்தீவு நன்றி

பொருளாதார சரிவை சமாளிக்க இந்தியா மாலத்தீவுக்கு 300 கோடி ரூபாய் வழங்கி உள்ளது.

👤 Sivasankaran1 Oct 2020 8:40 AM GMT
இந்தியாவுக்கு மாலத்தீவு நன்றி
Share Post

கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க 300 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கிய இந்தியாவுக்கு மாலத்தீவு நன்றி தெரிவித்துள்ளது.

மாலத்தீவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க கடந்த மார்ச் இறுதியில் இந்தியா மருத்துவ குழுவை அனுப்பிவைத்தது. ஏப்ரலில் மருந்து பொருட்களையும் மே மாதத்தில் அத்தியாவசிய உணவு பொருட்களையும் இந்தியா அனுப்பி வைத்தது.

கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார சரிவை சமாளிக்க இந்தியா மாலத்தீவுக்கு 300 கோடி ரூபாய் வழங்கி உள்ளது. இதையடுத்து இந்தியாவுக்கு மாலத்தீவு நன்றி தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடக்கும் ஐ.நா. சபையின் 75ம் ஆண்டு பொது சபை கூட்டத்தில் மாலத்தீவின் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஷாகித் பேசினார்

"கொரோனா தொற்று சர்வதேச அளவில் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளது. எங்களின் நட்பு நாடுகளின் உதவிகள் இல்லாவிடில் எங்களால் கொரோனாவை சமாளித்திருக்க முடியாது."

"குறிப்பாக கடும் நெருக்கடியிலும் இந்தியா எங்களுக்கு செய்து வரும் உதவிகளை ஒரு போதும் மறக்க முடியாது. இதற்காக இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்." என்று அவர் கூறினார்.