Home » சட்டம் & அரசியல் » வடக்கு கிழக்கு மாகாணசபைகளை நீக்குவது தற்கொலைக்கு சமமாகும்! சி.வி.விக்னேஸ்வரன்

வடக்கு கிழக்கு மாகாணசபைகளை நீக்குவது தற்கொலைக்கு சமமாகும்! சி.வி.விக்னேஸ்வரன்

வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய ஏழு மாகாணங்களில் மாகாணசபைகளை நீக்குவதில் எந்தச் சிக்கலும் ஏற்படாது.

👤 Sivasankaran3 Oct 2020 7:25 AM GMT
வடக்கு கிழக்கு மாகாணசபைகளை நீக்குவது தற்கொலைக்கு சமமாகும்! சி.வி.விக்னேஸ்வரன்
Share Post

"சிறிலங்காவில் தமிழ் மக்கள் சமஷ்டி அடிப்படையில் தீர்வு ஒன்றை பெற்றுக்கொள்வதற்கு இந்தியாவின் உதவியும் ஒத்தாசையும் எமக்கு மிகவும் அவசியமாகும்" என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் தமிழ் மக்கள் சமஷ்டி அடிப்படையில் தீர்வு ஒன்றை பெற்றுக்கொள்வதற்கு இந்தியாவின் உதவியும் ஒத்தாசையும் எமக்கு மிகவும் அவசியம். இதற்கு இந்தியாவுடனான தமிழ் மக்களின் சுமூக உறவு அவசியம்.

இந்தியாவுடன் நாம் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவேண்டும். ஆனால், இந்தியாவுடனான எமது அணுகுமுறை தனி ஒரு நபர் சார்ந்தோ அல்லது தனி ஒரு கட்சி சார்ந்தோ இருக்க முடியாது. இருக்கக்கூடாது. எனினும் மோடி தலைமையிலான அரசாங்கமும் தற்போதுள்ள இந்திய கொள்ளை வகுப்பாளர்களும் இவற்றை நன்கு புரிந்து உரிய முறையில் காய்களை நகர்த்துவார்கள் என்றே நான் நம்புகின்றேன்.

தற்போதைய இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் சிறிலங்கா விடயத்தில் நீண்ட அனுபவமுடையவராகவும் சர்வதேச அரசியலில் மிகச் சிறந்த ராஜதந்திரியாகவும் காணப்படுகின்றார். அவர் எமது பிரச்சனையை திறம்பட கையாளர்வார் என்பது எனது எதிர்பார்ப்பு. ஆனால் சிறிலங்கா அரசாங்கம் சார்பானவர்கள் மாகாணசபைகளை உடனே நீக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகின்றார்கள்.

வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய ஏழு மாகாணங்களில் மாகாணசபைகளை நீக்குவதில் எந்தச் சிக்கலும் ஏற்படாது.

எம்மைப் பொறுத்த வரையில் முழுமையான சமஷ்டி முறையிலான பொறிமுறையொன்று வடக்கு கிழக்கில் நிறுவப்படும் வரை வடக்கு கிழக்கு மாகாணசபைகளை நீக்குவது தற்கொலைக்கு சமமாகும். இவ்வாறான கருத்துக்களை எல்லாம் இந்தியாவிற்கு தெரியப்படுத்த வேண்டிய கடப்பாடு எனக்குள்ளது. இச் சந்தர்ப்பத்தை அதற்காக நான் பயன்படுத்துகின்றேன்.