Home » சட்டம் & அரசியல் » நான் நலமாக இருக்கிறேன்: அதிபர் டிரம்ப்

நான் நலமாக இருக்கிறேன்: அதிபர் டிரம்ப்

நாங்கள் இன்னும் அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக்க வேண்டும்

👤 Sivasankaran4 Oct 2020 12:09 PM GMT
நான் நலமாக இருக்கிறேன்:  அதிபர் டிரம்ப்
Share Post

கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், வாஷிங்டனின் புகா் பகுதியான பெதெஸ்டாவில் உள்ள வால்டா் ரீட் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அதிபர் டிரம்ப், நான் நலமாக இருப்பதாக சுட்டுரையில் 4 நிமிட காணொலிப் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கும், அவரது மனைவி மெலானியாவுக்கும் கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, தலைநகா் வாஷிங்டனின் புகா் பகுதியான பெதெஸ்டாவில் உள்ள வால்டா் ரீட் ராணுவ மருத்துவமனைக்கு விமானம் மூலம் அவா் வெள்ளிக்கிழமை அழைத்துச் செல்லப்பட்டாா்.

தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வரும் டிரம்ப், நான் இப்போது மிகவும் நன்றாக இருப்பதை உணர்வதாகவும், விரைவில் பணிக்குத் திரும்ப திட்டமிட்டுள்ளதாகச் சுட்டுரையில் (டுவிட்டர்) 4 நிமிட காணொலிப் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள காணொலியில், "நான் இங்கு வந்தபோது உடல்நிலை சரியில்லாமல் இருந்தது, நான் இப்போது மிகவும் நலமாக இருப்பதை நன்றாக உணர்கிறேன். என்னைத் திரும்பப் பெற மருத்துவர்கள் கடுமையாக உழைக்கிறார்கள்".

"நான் விரைவில் திரும்பி வருவேன், பிரசாரத்தை நிறைவு செய்ய வேண்டும் என்பதில் நான் ஆர்வமாக உள்ளேன்," என்று தெரிவித்துள்ள டிரம்ப், கொரோனா நோய்த்தொற்றை எதிர்த்துப் போராடுவதில் கடந்த 6 மாதங்களில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. "நாங்கள் இந்தக் கொரோனா நோய்த்தொற்றை வெல்லப் போகிறோம்" என்று கூறியுள்ளார் டிரம்ப்.

அமெரிக்க மற்றும் உலக மக்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்ததோடு, அனைத்து அமெரிக்கர்களுக்காகவும் போராடுவதாகவும், "அடுத்த சில நாள்களில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம், இது உண்மையான சோதனை என்று நான் நினைக்கிறேன்" என்று டிரம்ப் கூறினார்.

நான் திரும்பி வர வேண்டும், ஏனென்றால் நாங்கள் இன்னும் அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக்க வேண்டும் என டிரம்ப் அந்தக் காணொலிப் பதிவில் தெரிவித்துள்ளார்.