
போர்க்காலத்தில் காணாமற்போனவர்கள் இறந்து போயிருக்கலாம் என்று அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்ட செயகலத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்களின் பிரச்சினை சம்பந்தமான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
போர்க் காலத்தில் காணாமல்போனவர்கள் இறந்து போயிருக்கலாம் அல்லது வெளிநாடுகளுக்கு சென்றிருக்கலாம். இது சம்பந்தமாகவும் நாம் தீர்மானம் ஒன்று வர முடியும்.
உதாரணமாக போர் நடைபெற்ற காலத்தில் விடுதலைப் புலிகளின் தாக்குதலில் சிக்கி உயிரிழந்த படையினரது உடல்கள் கிடைக்கவில்லை. அவர்களும் காணாமல் போனவர்கள் பட்டியலில் உள்ளனர்.
எல்.எல்.ஆர்.சி அறிக்கையில் போர் காரணமாக 21 ஆயிரம் பேர் காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் சுமார் 5 ஆயிரம் பேர் இராணுவத்தினர். இந்த உண்மையை புரிந்துக்கொள்ள வேண்டும் எனவும் ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.