Home » சட்டம் & அரசியல் » கம்பஹாவைச் சேர்ந்த படையினரை முகாம்களுக்கு திரும்ப வேண்டாம் என அறிவிப்பு!

கம்பஹாவைச் சேர்ந்த படையினரை முகாம்களுக்கு திரும்ப வேண்டாம் என அறிவிப்பு!

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.

👤 Sivasankaran5 Oct 2020 11:36 AM GMT
கம்பஹாவைச் சேர்ந்த படையினரை முகாம்களுக்கு திரும்ப வேண்டாம் என அறிவிப்பு!
Share Post

கம்பஹா - மினுவங்கொட மற்றும் திவுலப்பிட்டிய பகுதிகளைச் சேர்ந்த முப்படையினர் மற்றும் சிவில் பாதுகாப்பு படையினர், மறு அறிவித்தல் வரும் வரை, முகாம்களுக்கு திரும்ப வேண்டாம் என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

பெண் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.

இந்தப் பகுதிகள் தவிர்ந்த கம்பஹா மாவட்டத்தின் ஏனைய பகுதிகளைச் சேர்ந்த முப்படையினரை நாளை மாத்திரம் பணிக்குத் திரும்ப வேண்டாம் என்றும் இராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.

அதேவேளை, குறித்த பகுதிகளில் உள்ள முகாம்களில் பணியாற்றும் முப்படையினர் வீடுகளுக்குத் திரும்புவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.