
கொரோனா நோய்த்தொற்றை உருவாக்கி அமெரிக்கா மற்றும் உலகத்துக்கு பேரழிவை ஏற்படுத்தியதற்காக சீனா அதிக விலையை கொடுக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கொரோனா நோய்த்தொற்றை உருவாக்கி பரவவிட்டது சீனா தான் என்று குற்றம்சாட்டிய டிரம்ப், அவர்கள் உலகத்திற்காக செய்த இந்த காரியத்திற்காக அதிக விலையை கொடுக்க நேரிடும்.
மேலும், எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது 'கடவுளிமிருந்து வந்த ஆசீர்வாதம்' என்று டிரம்ப் கூறியுள்ளார். ஏனெனில் கொரோனாவுக்கான மருந்து கண்டுபிடிப்பதன் அவசியத்தை கடவுள் கற்றுக்கொடுத்துள்ளார்.
தனக்கு கிடைத்த கொரோனாத் தொற்றுக்கான சிகிச்சையைப் பாராட்டிய டிரம்ப், அமெரிக்கர்களுக்கு " கொரோனா மருந்துகளை இலவசமாக வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.