Home » சட்டம் & அரசியல் » கொழும்புக்கு வருகிறது சீனக் குழு!

கொழும்புக்கு வருகிறது சீனக் குழு!

நாளை மறுநாள் ஜனாதிபதியையும் பிரதமரையும் இக்குழுவினர் சந்திப்பார்கள்

👤 Sivasankaran8 Oct 2020 7:37 AM GMT
கொழும்புக்கு வருகிறது சீனக் குழு!
Share Post

சீனாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் குழு உறுப்பினருமான யாங் ஜீச்சி (Yang Jiechi) தலைமையிலான உயர் மட்டக்குழு ஒன்று நாளை கொழும்பு வரவுள்ளது.

இக்குழுவினர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோரை மட்டும் சந்திக்கும் எனவும், பன்னாட்டுத் தொற்று நோயாக உருவெடுத்துள்ள கொரோனாவை எதிர்கொள்வது மற்றும், பொருளாதார உறவுகளைப் புதுப்பிப்பது போன்ற இரு தரப்பு விடயங்களை ஆராய்வதற்காக இந்தக் குழு இலங்கை வருகின்றது.

நாளை மறுநாள் ஜனாதிபதியையும் பிரதமரையும் இக்குழுவினர் சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கொழும்பைத் தவிர வேறு இடங்களுக்கு இவர்கள் செல்லமாட்டார்கள் எனவும், ஜனாதிபதி, பிரதமரைத் தவிர வேறு சந்திப்புக்களில் ஈடுபடமாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.