நாட்டை முழுமையாக முடக்குவதற்கு அரசாங்கம் தயாரில்லை என்று, சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பு காணப்படும் பகுதியில் ஊரடங்கு சட்டம் விதிக்கப்படும் அல்லது அந்தப் பகுதி மாத்திரம் முடக்கப்படும்.
கம்பஹாவின் சில பகுதிகளில் நோயாளர்கள் இனம் காணப்பட்ட பின்னரே அந்த பகுதிகளில் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது .
மினுவாங்கொட ஆடைதொழிற்சாலையில் கொரோனா வைரஸ் பரவுவதற்கு யார் காரணம் என்பதை கண்டறிவதற்கான நடவடிக்கைகள் விசாரணைகள் இடம்பெறுகிறது.
கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் இரண்டாவது மூன்றாவது தொடர்பிலிருந்தவர்கள் இன்னமும் சோதனை செய்யப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.