Home » சட்டம் & அரசியல் » உலக உணவுத்திட்ட அமைப்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு

உலக உணவுத்திட்ட அமைப்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு

இந்த விருதுக்கு உலக உணவுத்திட்ட அமைப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

👤 Sivasankaran9 Oct 2020 1:27 PM GMT
உலக உணவுத்திட்ட அமைப்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு
Share Post

2020-ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு உலக உணவுத்திட்ட அமைப்பிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான நோபல் பரிசு, மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய 6 துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. இதில், அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயிலும், பிற துறைகளுக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமிலும் அறிவிக்கப்படும்.

நார்வே தலைநகர் ஆஸ்லோவில் 2020-ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு உலக உணவுத்திட்ட அமைப்பிற்கு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பசிப்பிணிப் போக்குதல் மற்றும் போரைத்தவிர்த்து அமைதியை காப்பதால் இந்த விருதுக்கு உலக உணவுத்திட்ட அமைப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து 53 ஆண்டுகளாக 83 நாடுகளில் 9 கோடிப் பேருக்கு உணவு வழங்கி சேவையாற்றி வந்ததால் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.