Home » சட்டம் & அரசியல் » பொய்யான பிரசாரங்களுக்கு இரையாக வேண்டாம்!

பொய்யான பிரசாரங்களுக்கு இரையாக வேண்டாம்!

முகநூலில் ஜனாதிபதி இது தொடர்பாக செய்தி ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

👤 Sivasankaran9 Oct 2020 1:37 PM GMT
பொய்யான பிரசாரங்களுக்கு இரையாக வேண்டாம்!
Share Post

பொய்யான பிரச்சாரங்களுக்கு இரையாக வேண்டாம் என்றும், கொரோனா தொடர்பான சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கேட்டுக்கொண்டுள்ளார். முகநூலில் ஜனாதிபதி இது தொடர்பாக செய்தி ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

கொரோனா தொற்று உலகெங்கும் பரவி வரும் நேரத்தில், நாங்கள் ஒரு வலுவான தேசமாக அதனைத் தோற்கடித்தோம். இன்று, கொரோனா மீண்டும் நமது நாட்டில் செயல்நிலையில் இருக்கிறது.

இந்த சவாலான சூழ்நிலையில், சுகாதார அதிகாரிகள் வழங்கிய அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும், பல்வேறு குழுக்களால் பரப்பப்படும் தவறான பிரச்சாரங்களுக்கு ஏமாந்து போகாமல், உத்தியோகபூர்வ அரசாங்க தகவல் சேவைகளிலிருந்து தேவையான தகவல்களைப் பெற்றுக் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறேன்." என்று ஜனாதிபதி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.