Home » சட்டம் & அரசியல் » மக்களைச் சந்தித்து நேரடித் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ள டிரம்ப்..!

மக்களைச் சந்தித்து நேரடித் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ள டிரம்ப்..!

நேரடியாக கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளார் என வெள்ளை மாளிகை வட்டாரம் தெரிவித்துள்ளது.

👤 Sivasankaran11 Oct 2020 9:42 AM GMT
மக்களைச் சந்தித்து நேரடித் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ள டிரம்ப்..!
Share Post

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முன்னதாக கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். பின்னர் அவருக்கு அமெரிக்க ராணுவ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டதை அடுத்து தற்போது தாக்கம் குறைந்து மீண்டும் பிரச்சாரத்தில் ஈடுபட துவங்கி உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

மருத்துவமனையில் இருந்து வெள்ளை மாளிகை திரும்பிய அவர் காணொலி மாநாட்டின் மூலமாகத் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். தற்போது நேரடியாக கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளார் என வெள்ளை மாளிகை வட்டாரம் தெரிவித்துள்ளது.

வரும் நவம்பர் 3ஆம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. குடியரசுக் கட்சியும் ஜனநாயகக் கட்சியும் தீவிரத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடேன் மற்றும் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் ஆகியோர் டிரம்பை கடுமையாக விமர்சித்து பிரச்சாரம் மேற்கொண்டு உள்ளனர்.

டிரம்ப் நேரடியாக மக்களை சந்தித்தாலே ஒழிய மக்களின் வாக்குகளை கவர முடியாது என குடியரசு கட்சி கருத்து தெரிவித்தது.

இதனை அடுத்து அவர் நேரடிப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். வரும் திங்களன்று ஃப்ளோரிடாவுக்கு பிரச்சாரத்திற்கு செல்ல உள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், ஒருலேண்டோ ஸ்டான்போர்ட் சர்வதேச விமான நிலையம் அருகே பிரச்சாரம் செய்ய உள்ளார்.