
குவைத்தில் உள்ள சிறிலங்காத் தூதரகம் மேலும் ஒரு வாரத்துக்கு மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குவைத்தில் உள்ள சிறிலங்காத் தூதரகப் பணியாளர்கள் மூவருக்கும், அங்கு தங்கியுள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் 44 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
இதை அடுத்து செப்ரெம்பர் 26ஆம் திகதி குவைத்தில் உள்ள சிறிலங்காத் தூதரகம் இரண்டு வாரங்களுக்கு மூடப்பட்டது. இந்த நிலையில், மேலும் ஒரு வாரத்துக்கு மூடப்பட்டுள்ள தூதரகம், வரும் 18ஆம் திகதியே மீளத் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தூதரகப் பணியாளர்கள் மற்றும் அங்கு தங்கியுள்ள புலம்பெயர் தொழிலாளர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.