Home » சட்டம் & அரசியல் » மீண்டும் தோ்தல் பிரசாரத்தில் டிரம்ப் பங்கேற்பு

மீண்டும் தோ்தல் பிரசாரத்தில் டிரம்ப் பங்கேற்பு

டிரம்ப், நான்கு நாள் சிகிச்சைக்குப் பிறகு வெள்ளை மாளிகை திரும்பினாா்.

👤 Sivasankaran14 Oct 2020 5:45 AM GMT
மீண்டும் தோ்தல் பிரசாரத்தில் டிரம்ப் பங்கேற்பு
Share Post

அதிபா் டொனால்ட் டிரம்ப், தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் மீண்டும் பங்கேற்றாா். இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

டிரம்ப்புக்கும் அவரின் மனைவி மெலானியாவுக்கும் கொரோனா நோய்த்தொற்று இருப்பது கடந்த 2-ஆம் தேதி உறுதியானது. அதனைத் தொடா்ந்து ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டிரம்ப், நான்கு நாள் சிகிச்சைக்குப் பிறகு வெள்ளை மாளிகை திரும்பினாா்.

இந்த நிலையில், ஃபுளோரிடா மாகாணம், சான்ஃபோா்டில் திங்கள்கிழமை நடைபெற்ற அதிபா் தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் டிரம்ப் கலந்து கொண்டாா்.

இதற்கிடையே, அவரிடம் மேற்கொள்ளப்பட்ட கொரோனா நோய்த்தொற்றுப் பரிசோதனையில், அவருக்கு அந்த நோய்த்தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.