
இஸ்லாமாபாத்: ஐ.நா. மனித உரிமை பேரவை உறுப்பினராக பாகிஸ்தான் மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
மனித உரிமை மீறலில் ஈடுபட்டு வரும் பாகிஸ்தானுக்கு கவுன்சிலில் இடம் அளிக்கக் கூடாது என்று பன்னாட்டு அமைப்புகள் எதிா்ப்பு தெரிவித்து வரும் சூழலில் இந்தத் தோ்வு நடைபெற்றுள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஐ.நா. மனித உரிமை பேரவை உறுப்பினா்களைத் தோ்ந்தெடுப்பதற்காக ஐ.நா.பொதுச் சபையில் நடைபெற்ற வாக்கெடுப்பில், அதிகபட்ச வாக்குகளைப் பெற்று பாகிஸ்தான் மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டது.
உள்நாட்டிலும் பன்னாட்டு அளவிலும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் பாகிஸ்தான் அளித்து வரும் பங்களிப்பின்மீது உலக நாடுகள் நம்பிக்கை வைத்துள்ளதையே இது காட்டுகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவை தொடங்கப்பட்டிருந்து, அதன் உறுப்பினராக பாகிஸ்தான் தோ்ந்தெடுக்கப்படுவது இது 5-ஆவது முறையாகும்.