Home » சட்டம் & அரசியல் » தேவைப்பட்டால் அதிக ஆபத்துள்ள பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும்! இராணுவத் தளபதி

தேவைப்பட்டால் அதிக ஆபத்துள்ள பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும்! இராணுவத் தளபதி

கொரோனா தொற்றாளர்களின் அனைத்து தொடர்புகளும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

👤 Sivasankaran15 Oct 2020 6:31 AM GMT
தேவைப்பட்டால் அதிக ஆபத்துள்ள பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும்! இராணுவத் தளபதி
Share Post

நாடு முழுவதும் பதிவான கொரோனா தொற்று குறித்த தினசரி புதுப்பிப்புகளை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்

அத்துடன், கணிசமான எண்ணிக்கையிலான கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ள பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

"ஊரடங்கு உத்தரவு இல்லாத பகுதிகளில் இருந்து பதிவான கொரோனா நோயாளர்கள் குறித்து நாங்கள் ஆராய்ந்து வருகிறோம், அந்தந்த பகுதிகளின் நிலைமையைப் பொறுத்து ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படும். மேலும், இதுவரை தெரிவிக்கப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் அனைத்து தொடர்புகளும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிதாக கண்டறியப்பட்ட நோயாளிகளின் விவரங்களைத் தெரிவிப்பதில் பாதுகாப்பு மற்றும் சுகாதார அதிகாரிகளுடன் ஒத்துழைப்பு வழங்குமாறும் இராணுவத் தளபதி மக்களைக் கேட்டுக்கொண்டார்.