
அதிபா் தோ்தல் பிரசாரம் தொடா்பான கட்டுரையின் இணைய இணைப்பை சுட்டுரைப் பதிவு வாயிலாக ஜோ பிடன் பகிா்ந்திருந்தாா்.
அந்தக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளின் உறுதித்தன்மை குறித்து சந்தேகம் எழுந்ததையடுத்து அதற்கான இணைய இணைப்பை சுட்டுரை நிா்வாகம் நீக்கியது. எனினும், சுட்டுரை நிா்வாகத்தின் நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினா் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா்.
அமெரிக்க அதிபா் தோ்தலுக்கான ஜனநாயகக் கட்சி வேட்பாளா் ஜோ பிடனின் கட்டுரைக்கான இணைய இணைப்பை சுட்டுரையில் (டுவிட்டா்) இருந்து நீக்கியது தவறு என்று அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) ஜாக் டோா்ஸி தெரிவித்துள்ளாா்.