Home » சட்டம் & அரசியல் » புதிய விதிமுறைகளின்படி நாடாளுமன்ற நடவடிக்கைகளை நடத்த முடியாது! சஜித் பிரேமதாச

புதிய விதிமுறைகளின்படி நாடாளுமன்ற நடவடிக்கைகளை நடத்த முடியாது! சஜித் பிரேமதாச

பொதுமக்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சமமாகச் செயல்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

👤 Sivasankaran20 Oct 2020 6:24 AM GMT
புதிய விதிமுறைகளின்படி நாடாளுமன்ற நடவடிக்கைகளை நடத்த முடியாது! சஜித் பிரேமதாச
Share Post

அண்மைய கொரோனா வைரஸ் பரவலை அடுத்து அரசாங்கம் அறிமுகப்படுத்திய புதிய கொரோனா தடுப்பு விதிமுறைகளின்படி நாடாளுமன்ற நடவடிக்கைகளை நடத்த முடியாது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதிய விதிமுறைகள் பொதுமக்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சமமாகச் செயல்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மக்கள் தங்கள் வாழ்வாதாரத்துடன் போராடி வரும் ஒரு நேரத்தில், அரசியலமைப்பில் ஒரு திருத்தத்தை அறிமுகப்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்துவதைப் பார்ப்பது துன்பகரமானது என்றும் அவர் கூறியுள்ளார்.