கொரோனாப் பரவலை அடுத்த கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலையத்தில் வைத்து தம்மை மனிதாபிமானமற்ற முறையில் நடத்தியதாக தொழிற்சாலைகளின் பணியாளர்கள் இராணுவத்தினர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மறுத்திருக்கிறார்.
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் பணியாளர்கள் 90 பேர் இது தொடர்பான முறைபாட்டை மனித உரிமை ஆணைக்குழுவில் அண்மையில் பதிவு செய்திருந்தனர்.
எனினும் இதனை மறுத்துள்ள இராணுவ தளபதி சவேந்திர சில்வா, தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளின் போது முன்கூட்டியே அவர்களுக்கு தொலைபேசி மூலம் அறிவித்து அவர்களை தயாராகும்படி கூறிய பின்னரே அவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்திருக்கிறார்.
சில இடங்களில் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளின் போது மக்கள் கூடுதலான நேரங்களை அதற்காக எடுத்துக்கொண்ட சம்பவங்களும் இடம்பெற்றதாக இராணுவத் தளபதி தெரிவித்திருக்கிறார்.
எனினும் படையினர் சிறிலங்கா மக்களைச் சகோதர, சகோதரிகளை போலவே இந்த விடயத்தில் நடத்தியதாக இராணுவ தளபதி தெரிவித்திருக்கிறார்.