
செல்லம் ராஜேஷ் கண்ணன், வயது 26, சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்தார். திருமணமாகி, 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.
சமூகவலைதளத்தில் அறிமுகமான, 15 வயது சிறுமியை, நேரில் அவர் சந்தித்துள்ளார். அப்போது அத்துமீறி முத்தம் கொடுத்ததாகவும், பாலியல் தொல்லைக் கொடுத்ததாகவும், ராஜேஷ் கண்ணன் மீது, கடந்தாண்டு வழக்கு தொடரப்பட்டது.
இதையடுத்து, வேலையில் இருந்து அவர் நீக்கப்பட்டார். அவரது காதல் மனைவியும் பிரிந்து சென்றுவிட்டார்.
இந்த வழக்கை விசாரித்த, சிங்கப்பூர் நீதிமன்றம், சிறுமியை முத்தமிட்ட குற்றத்துக்காக, ராஜேஷ் கண்ணனுக்கு ஏழு மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற வழக்கில் தண்டனை அறிவிக்கப்படவில்லை.