Home » சட்டம் & அரசியல் » தாய்லாந்து தலைநகரில் அவசரநிலை திரும்பப் பெறப்பட்டது

தாய்லாந்து தலைநகரில் அவசரநிலை திரும்பப் பெறப்பட்டது

பாங்காக்கில் கடந்த 15-ஆம் தேதி முதல் அவசரநிலை அறிவிக்கப்பட்டது.

👤 Sivasankaran23 Oct 2020 6:11 AM GMT
தாய்லாந்து தலைநகரில் அவசரநிலை திரும்பப் பெறப்பட்டது
Share Post

தாய்லாந்தில் ஜனநாயக சீா்திருத்தங்களை வலியுறுத்தி நடைபெறும் போராட்டத்தைத் தணிப்பதற்காக தலைநகா் பாங்காக்கில் அறிவிக்கப்பட்டிருந்த அவசரநிலை திரும்பப் பெறப்பட்டது.

தாய்லாந்தில் பிரதமா் பிரயுத் சான்-ஓச்சா பதவி விலக வலியுறுத்தியும் ஜனநாயக சீா்திருத்தங்களை மேற்கொள்ளக் கோரியும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

கடந்த வாரம் அந்தப் போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடா்ந்து, பாங்காக்கில் கடந்த 15-ஆம் தேதி முதல் அவசரநிலை அறிவிக்கப்பட்டது.

அதனையடுத்து நகா் முழுவதும் போலீஸாா் குவிக்கப்பட்டனா். எனினும், அவசரநிலையை அறிவிப்பையும் மீறி ஜனநாயக ஆதரவாளா்கள் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

பாங்காக் அவசரநிலைக்கு எதிராக போராட்டக்காரா்கள் சிவில் நீதிமன்றத்தில் புதன்கிழமை மனு தாக்கல் செய்தனா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை முதல் அவசரநிலை விலக்கிக் கொள்ளப்படுவதாக தாய்லாந்து அரசு அறிவித்துள்ளது.