Home » சட்டம் & அரசியல் » நாடாளுமன்றத்தில் தமிழ் மொழிக்காக குரல் கொடுத்த ஹரிணி அமரசூரிய!

நாடாளுமன்றத்தில் தமிழ் மொழிக்காக குரல் கொடுத்த ஹரிணி அமரசூரிய!

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய வலியுறுத்தினார்.

👤 Sivasankaran24 Oct 2020 6:54 AM GMT
நாடாளுமன்றத்தில் தமிழ் மொழிக்காக குரல் கொடுத்த ஹரிணி அமரசூரிய!
Share Post

"கொரோனா வைரஸ் பரவல் தொடர்பான அறிவிப்புகளும் விழிப்புணர்வுகளும் பெரும்பாலும் சிங்களம் அல்லது ஆங்கில மொழிகளில் மாத்திரமே உள்ளன. தமிழ் மொழி ரீதியான அறிவிப்புகள் மிகவும் குறைவாக உள்ளன. இது தொடர்பில் சுகாதார அமைச்சு கவனம் செலுத்த வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் உரையாற்றும்போதே இதனை வலியுறுத்திய அவர் மேலும் கூறுகையில்,

"சுகாதார அறிவித்தல்கள் மூன்று மொழிகளிலும் வழங்கப்பட வேண்டும். அறிவிப்புகள் மற்றும் விழிப்புணர்வுகள் பெரும்பாலும் சிங்கள, ஆங்கில மொழிகளில் மாத்திரமே வெளியிடப்படுகின்றன.

தமிழ் மொழி ரீதியான அறிவிப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளன. அதன் காரணமாக தமிழ் மொழி ரீதியான அறிவிப்புகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும்" - என்றார்.