Home » சட்டம் & அரசியல் » இஸ்ரேலுடன் தூதரக நல்லுறவை ஏற்படுத்திக்கொள்ள சூடான் சம்மதம்

இஸ்ரேலுடன் தூதரக நல்லுறவை ஏற்படுத்திக்கொள்ள சூடான் சம்மதம்

சூடான் சம்மதம் தெரிவித்திருப்பதாக வாஷிங்டனிலுள்ள வெள்ளை மாளிகையில் டிரம்ப் அறிவித்தாா்.

👤 Sivasankaran25 Oct 2020 11:43 AM GMT
இஸ்ரேலுடன் தூதரக நல்லுறவை ஏற்படுத்திக்கொள்ள சூடான் சம்மதம்
Share Post

ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைனுக்கு அடுத்தபடியாக, இஸ்ரேலுக்கு அங்கீகாரம் அளித்து, அந்த நாட்டுடன் நல்லுறவை ஏற்படுத்த சூடான் முன் வந்துள்ளது.

இஸ்ரேலுடன் தூதரக நல்லுறவை ஏற்படுத்திக்கொள்ள சூடான் சம்மதம் தெரிவித்திருப்பதாக வாஷிங்டனிலுள்ள வெள்ளை மாளிகையில் டிரம்ப் அறிவித்தாா்.

இதுதொடா்பாக தனது ஓவல் அலுவலகத்தில் இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் சூடான் பிரதமா் அப்துல்லா ஹாம்டாக்குடன் டிரம்ப் தொலைபேசியில் பேசிக்கொண்டிருக்கும்போதே, இந்த அறிவிப்பை செய்தியாளா்களிடம் அவா் வெளியிட்டாா்.

இஸ்ரேலுடன் நல்லுறவை ஏற்படுத்தியுள்ளது சூடான் வரலாற்றில் மிகுந்த முக்கியமான நாள்களில் ஒன்று என்று அப்போது அவா் கூறினாா்.